இலங்கையர்கள் உட்பட 558 பேர் துருக்கியில் கைது

சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் உட்பட சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் 558 பேரை துருக்கி இராணுவத்தினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் (12) வெள்ளிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த குழுவில் இலங்கையர்கள் உட்பட பாகிஸ்தான், பங்களாதேஸ், மொரோக்கோ, டியுனிஸியா, ஈரான், ஈராக், பலஸ்தீன், எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாட்டவர்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக பிரவேசிப்பதற்கு பிரதான பாதையாக மனித கடத்தல்காரர்கள் துருக்கியைப் பயன்படுத்தி வருவதாக அந்நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தற்பொழுது பல முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இதுவரை எந்தவித உத்தியோகபுர்வ அறிவித்தலும் விடுக்கபடாதுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன.1396887739court-a

பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அரசியல் தீர்மானங்களை மாற்ற முடியாது

பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வௌிநாடுகளில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதன் ஊடாக இந்த நாட்டு அரசியல் தீர்மானங்களை மாற்றுவதற்கு முடியாது என்று நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அரசியல் தீர்மானங்களை மாற்ற முடியாது
அரசியல் தீர்மானங்களை எடுப்பது இந்த நாட்டு மக்களே என்று அவர் கூறியுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.

செவணகல பிரதேசத்தில் இருவர் வெட்டிக் கொலை

வெவணகல, துங்கமயாய பிரதேசத்தில் இன்று அதிகாலை 04.00 மணியளவில் இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

பயிர் நிலம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த குடிசையில் உறங்கிக் கொண்டிருந்தவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
செவணகல பிரதேசத்தில் இருவர் வெட்டிக் கொலை
அதே பிரதேசத்தைச் ​சேர்ந்த 39 மற்றும் 54 வயதுடைய இரண்டு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

செவணகல பொலிஸாருக்கு கிடைத்துள்ள தகவலுக்கமைய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

சொத்துக்களை திருடிய ஒருவர் கைது

சொத்துக்களை தேடிய குற்றத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் றாகம, பகலவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

றாகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் என்று தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
சொத்துக்களை திருடிய ஒருவர் கைது
றாகம மற்றும் கடவத்தை பிரதேசங்களில் வீடுகளை உடைத்து திருடுதல் மற்றும் கொள்ளையிடுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் சந்தேகநபர் தொடர்புபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 07 தங்க மாலைகள், 03 பெண்டன்கள் மற்றும் தங்க மோதிரங்கள் உள்ளிட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

மகர பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே கைதாகியுள்ளார்.

றாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கிரிக்கட் வீழ்ச்சியடைந்துள்ளது

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கிரிக்கட் விளையாட்டு வீழ்ச்சியை சந்தித்திருப்பதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கிரிக்கட் வீழ்ச்சியடைந்துள்ளது
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தனது ஆதரவு கிரிக்கட் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் தலைவருக்கே இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது கிரிக்கட் நிர்வாகத்தில் இருக்கின்ற நபர்கள் ஜனாதிபதியையும் சேர்த்துக் கொண்டு கிரிக்கட் விளையாட்டை அழித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.

மருதானை டீ.ஆர். விஜேவர்தன மாவத்தையில் இருந்து ஒரு கிலோவுக்கும் அதிக ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. CTN

பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் உரிமையாளர் இன்றி ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

01 கிலோவும் 30 மில்லிகிராம் நிறையுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் தோற்கும்

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கத்தை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கூறியுள்ளார். 

இதன்காரணமாக மேலும் ஒரு வருடத்துக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். 

ஹட்டன், நோர்வூட் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இன்று அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட்டுள்ளன. இன்று எந்தவொரு மாகாண சபைகளும் இல்லை. இன்று மாகாண சபைகளின் அதிகாரம் இருப்பது ஆளுநர்களின் கையிலே என்று மைத்திரி குணரத்ன கூறியுள்ளார்

பாராளுமன்றம் 15 ஆம் திகதி கலைக்கப்படுவதாக கூறப்படுவது பொய்- பொதுஜன பெரமுன.

பாராளுமன்றம் எதிர்வரும் 15 ஆம் திகதி கலைக்கப்படப் போவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிடம் ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பாராளுமன்றம் மீண்டும் மே மாதம் 7 ஆம் திகதியே மீண்டும் கூடுகின்றது. ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் எதிர்வரும் 2020 மார்ச் மாதம் 03 ஆம் திகதியின் பின்னர்தான் யாப்பின்படி கிடைக்கப் பெறுகின்றது. பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு மூன்றில் இரண்டு அதிகாரம் தேவைப்படுகின்றது. பாராளுமன்றத்தில் அதற்கு வாய்ப்பில்லை.

எனவே, இந்த செய்தியில் எந்தவித உண்மைத் தன்மையும் கிடையாது. ஜனாதிபதிக்கு அதற்கு முன்னர் செய்வதாயின், ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை மாத்திரமே நடாத்த முடியும் எனவும் அவர் மேலும் கூறினார். img_1283

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் தோற்கும்

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கத்தை மக்கள் தோற்கடிப்பார்கள் என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கூறியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் அரசாங்கம் தோற்கும்
இதன்காரணமாக மேலும் ஒரு வருடத்துக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

ஹட்டன், நோர்வூட் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இன்று அனைத்து மாகாண சபைகளும் கலைக்கப்பட்டுள்ளன. இன்று எந்தவொரு மாகாண சபைகளும் இல்லை. இன்று மாகாண சபைகளின் அதிகாரம் இருப்பது ஆளுநர்களின் கையிலே என்று மைத்திரி குணரத்ன கூறியுள்ளார்.

Ceylon Tamil News,